Advertisment

“அதை ஏங்க கேக்குறிங்க; நல்லாத்தானே போயிட்டு இருக்கு” - வடிவேலு

Vadivelu Interview at thiruchendur

Advertisment

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்ற வடிவேலு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த வடிவேலு, “என்ன மனக்குறைகள் இருந்தாலும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்தால் நீங்கிவிடும்.நான் எந்தக் கட்சியிலும்கூட்டணியிலும் இல்லை. என் கூட்டணி என்பது காமெடி நடிகர்கள் வந்தால் இணைந்து நடிக்க வேண்டியதுதான்.

மாமன்னன், சந்திரமுகி-2, விஜய் சேதுபதியுடன்இணைந்து ஒரு படம் என நிறைய படங்களில் நடித்து வருகிறேன். நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் வெற்றிகரமாக 3-வது வாரம் ஓடிக்கொண்டிருக்கிறது. இது குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். பலரும் படத்தைப் பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக எனக்கு போன் செய்து வாழ்த்துச் சொல்லி வருகிறார்கள். இந்தப் படத்தின் வெற்றியால் தயாரிப்பாளர் மகிழ்ச்சியாக இருக்கிறார். நான் மீண்டும் திரைக்கு வந்தது மக்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

வாரிசு, துணிவு ஆகிய இரு படங்களுமே வெற்றியடைய வேண்டும். அதேபோல் எல்லாப் படங்களும் பெரிய வெற்றிபெற வேண்டும். சினிமா நன்றாக இருந்தால்தான் அனைவரும் நன்றாக இருக்க முடியும். அனைத்தும் கடவுளின் ஆசீர்வாதம்” என்றார். அப்போது நடிகர் சிங்கமுத்து குறித்தகேள்விக்கு, “அதை ஏங்க கேக்குறிங்க, நல்லாத்தானே போயிட்டு இருக்கு” என்கிற ரீதியில் பதிலளித்தார்.

actor Vadivelu PRESS MEET Thiruchendur Thunivu varisu
இதையும் படியுங்கள்
Subscribe