Skip to main content

“அதை ஏங்க கேக்குறிங்க; நல்லாத்தானே போயிட்டு இருக்கு” - வடிவேலு

Published on 24/12/2022 | Edited on 24/12/2022

 

Vadivelu Interview at thiruchendur

 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்ற வடிவேலு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த வடிவேலு, “என்ன மனக்குறைகள் இருந்தாலும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்தால் நீங்கிவிடும். நான் எந்தக் கட்சியிலும் கூட்டணியிலும் இல்லை. என் கூட்டணி என்பது காமெடி நடிகர்கள் வந்தால் இணைந்து நடிக்க வேண்டியதுதான்.

 

மாமன்னன், சந்திரமுகி-2, விஜய் சேதுபதியுடன் இணைந்து ஒரு படம் என நிறைய படங்களில் நடித்து வருகிறேன். நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் வெற்றிகரமாக 3-வது வாரம் ஓடிக்கொண்டிருக்கிறது. இது குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். பலரும் படத்தைப் பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக எனக்கு போன் செய்து வாழ்த்துச் சொல்லி வருகிறார்கள். இந்தப் படத்தின் வெற்றியால் தயாரிப்பாளர் மகிழ்ச்சியாக இருக்கிறார். நான் மீண்டும் திரைக்கு வந்தது மக்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

 

வாரிசு, துணிவு ஆகிய இரு படங்களுமே வெற்றியடைய வேண்டும். அதேபோல் எல்லாப் படங்களும் பெரிய வெற்றிபெற வேண்டும். சினிமா நன்றாக இருந்தால்தான் அனைவரும் நன்றாக இருக்க முடியும். அனைத்தும் கடவுளின் ஆசீர்வாதம்” என்றார். அப்போது நடிகர் சிங்கமுத்து குறித்த கேள்விக்கு, “அதை ஏங்க கேக்குறிங்க, நல்லாத்தானே போயிட்டு இருக்கு” என்கிற ரீதியில் பதிலளித்தார். 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

துணிவு பட நடிகர் மறைவு - திரையுலகினர் இரங்கல்

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
thunivu movie actor Rituraj Singh passed away

சின்னத்திரையில் பல்வேறு இந்து தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரிதுராஜ் சிங். தொடர்கள் மட்டுமல்லாது சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான துணிவு படத்தில் நடித்திருந்தார். 

சமீபத்தில் வயிற்றில் சில பிரச்சனைகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சில நாட்களுக்கு முன்பு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில் இன்று (20.02.2024) நள்ளிரவு 12.30 மணிக்கு மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார். அவருக்கு வயது 59. ஒரு மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றன. 

இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Next Story

“ஒரே ஒரு மாமன்னன் படம்தான் பண்ணேன்...” - அனுபவம் பகிர்ந்த வடிவேலு 

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
vadivelu about maamanna in  ciff

21வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா, டிசம்பர் 14 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை சென்னையின் பல்வேறு திரையரங்குகளில் நடைபெற்றது. இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் (Indo Cine Appreciation Foundation) கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் இந்த விழாவைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்தாண்டு திரைப்பட விழா போட்டியில் தமிழ் பிரிவில், அநீதி, அயோத்தி, கருமேகங்கள் கலைகின்றன, மாமன்னன், போர்த்தொழில், ராவணக் கோட்டம், சாயவனம், செம்பி, ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன், உடன்பால் மற்றும் விடுதலை பாகம் 1 உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டன.

இதில் மாமன்னன் படத்துக்காக வடிவேலுவுக்கு சிறந்த நடிகர் விருது கொடுக்கப்பட்டது. மேடையில் பேசிய அவர், “அழுகிற சீனெல்லாம் இப்போது ஒர்க்கவுட்டாகாது. அப்படி இருந்தும் மாமன்னன் படத்தை நீங்க பார்த்து ரசிச்சிருக்கீங்க. அதை எப்படி ஏத்துக்கிட்டீங்கன்னு புரியல. அழுததுக்கு விருது கொடுத்திருக்கீங்க. அதுதான் என்னுடைய வாழ்க்கையும் கூட. அது படம் அல்ல என்னுடைய வாழ்வியல். இந்த வெற்றி, மாரி செல்வராஜுக்கு சேர வேண்டும். அவர் வெற்றிமாறன் மாதிரி. இந்த வயசில் அவருடைய அனுபவம், நம்ம பட்ட கஷ்டத்தையெல்லாம் சொல்றாரு. 

மாமன்னன் படத்தில் இருக்கிற எல்லா சீனையும் புரட்டி போட்டு பார்த்தா, எல்லாமே காமெடி சீனாத்தான் இருக்கும். இதை மாரி செல்வராஜே என்னிடம் சொன்னார். இப்போ இருக்கிற டைரக்டர் எல்லாம், நடிகர்கள் சத்தமா பேசுனா, நம்ம உடல் மொழியில் கத்தாம மெல்ல ஆக்ட் பண்ணு எனச் சொல்கின்றனர். எல்லா ஷூட்டிங் ஸ்பாட்டிலும் நம்ம உடல் மொழிதான் ஓடிக்கிட்டு இருக்கு. நம்ம கலவை இல்லாத இடமே இல்லை என்கிறபோது ரொம்ப சந்தோசமா இருக்கு.  

ஒரே ஒரு மாமன்னன் படம்தான் பண்ணேன். வர கதையெல்லாம் சோக கதையா இருக்கு. ஒரே அழுகை. அதனால் ஒரு 5 வருஷம் கழிச்சு இது மாதிரி கதையை பார்ப்போம் என முடிவெடுத்துள்ளேன். மாமன்னன் படத்தில் டைரக்டர் அவருடைய வலியையும் சொல்லியிருந்தார். ஏழை மக்களின் வலியையும் சொல்லியிருந்தார். அந்த கதைக்கு விருது வாங்கினது ரொம்ப பெருமை” என்றார்.