/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/73_44.jpg)
தன் உடல்மொழியாலும் டைமிங் வசனங்களாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு. இப்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகும் 'மாமன்னன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். பின்பு லைகா நிறுவனம் தயாரிக்கும் 'சந்திரமுகி 2' படத்திலும் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் வடிவேலு நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள புதிய படத்தில் வடிவேலு நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இத்தகவல் உறுதியாகும் பட்சத்தில் முதல் முறையாக தனுஷ் படத்தில் நடிக்கவுள்ளார் வடிவேலு.
இதற்கு முன்பாக தனுஷின் 'படிக்காதவன்' படத்தில் விவேக் நடித்திருந்த 'அசால்ட் ஆறுமுகம்' கதாபாத்திரத்தில் வடிவேலு தான் முதலில் நடிக்க கமிட்டானார். படப்பிடிப்பும் சில நாட்கள் நடந்தது. பின்பு படக்குழுவிடம் சில பிரச்சனைகள் எழுந்ததாக சொல்லப்படுகிறது. அதனால் அவர் விலகிவிட்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)