Vadivelu, Fahadh Faasil Maareesan teaser released

வடிவேலு - ஃபகத் ஃபாசில் இருவரும் ‘மாமன்னன்’ படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள படம் ‘மாரீசன்’. இப்படத்தை ஆர்பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சுதீஷ் சங்கர் என்பவர் இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் அறிவிப்பு முன்னதாக வெளியாகியிருந்தது. அந்த அறிவிப்பு போஸ்டரில் இப்படம் ஒரு ரோடு ட்ராவல் ஜானர் எனத் தெரிந்தது.

பின்பு கடந்த ஆண்டு செப்டம்பரில் வடிவேலு பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து போஸ்டர் வெளியிடப்பட்டது. இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதத்தில் இப்படத்ஹ்டின் ரிலீஸ் அப்டேட் வெளியானது. வருகின்ற ஜூலையில் இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய ஒரு புது போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது. இந்த நிலையில் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

டீசரில் ஃபகத் ஃபாசிலும் வடிவேலும் ஒன்றாக ஒரே பைக்கில் பயணிக்கின்றனர். அப்போது பின்னணியில் 1957ஆம் ஆண்டு வெளியான ‘மாயா பஜார்’ படத்தில் வரும் ‘ஆஹா இன்ப நிலாவினிலே’ பாடல் ஒலிக்கிறது. அப்படியே சில காட்சிகள் வர திடேரென்று சீரியஸ் மோடுக்கு படம் மாறுகிறது. அதற்கேற்றவாறு பின்னணியில் ஒலிக்கப்பட்ட பாடலும் மாறுகிறது. அதாவது இதுவரை படத்தின் பாடல் ஒலித்த நிலையில் அதே பாடலை ஃபகத் ஃபாசிலும் வடிவேலும் மாரி மாரி பாடுகின்றனர்.

Advertisment

பின்பு க்ரைம் த்ரில்லர் ஜானருடன் டீசர் முடிகிறது. அதற்கேற்றவாறு காட்சிகளும் காட்டப்படுகிறது. ஒரு வசனமும் டீசரில் இடம்பெறவில்லை. முன்னதாக ஜூலையில் வெளியாகும் என்ற தெரிவிக்கப்பட்ட நிலையில் இதில் ரிலீஸ் குறித்த எந்த அப்டேட்டும் இடம் பெறவில்லை.