வலுக்கும் இம்சை அரசன் பிரச்னை.... 2 கோடி கேட்கும் வடிவேலு 

vadivelu

வடிவேலு நடிப்பில் உருவான இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் வெற்றியை தொடர்ந்து இம்சை அரசன் 24ஆம் புலிகேசி என்ற பெயரில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை படமாக்க இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டு சென்னையில் ரூ.6 கோடி செலவில் சரித்திர கால அரங்குகள் அமைத்து இயக்குனர் சிம்புதேவன் படப்பிடிப்பை தொடங்கினார். இப்படப்பிடிப்பில் நடித்த வடிவேலு இயக்குனருடன் கருத்து வேறுபாடு காரணமாக படத்தில் இருந்து விலகினார். இதனால் படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்ட அரங்கில் குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடக்காததால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு வடிவேலுவிடம் ரூ.9 கோடி நஷ்ட ஈடு பெற்று தரும்படி படக்குழுவினர் தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் புகார் அளித்தனர். இதையடுத்து தயரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தலைமையில் இதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.

ஏற்கனவே பட வேலைகளை தொடங்குவதில் தாமதம் செய்ததால் தனக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டு மன உளைச்சலுக்கு ஆளானதால் படத்தில் இருந்து விலகியதாக வடிவேலு அறிவித்திருந்த நிலையில் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற வடிவேலு வெகு நேரம் பிடி கொடுக்காமல் பேசியதை தொடர்ந்து தற்போது மேலும் ரூ.2 கோடி வாங்கிக் கொடுத்தால் படத்தில் நடிக்க தயார் என்று கூறி இருக்கிறார். இதையடுத்து இந்த புதிய சிக்கலை எப்படி சமாளிப்பது என்று தயாரிப்பாளர் சங்கம் ஆலோசித்து வருகிறது. மேலும் விரைவிலேயே வடிவேலு நடிக்க தடை வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகர் வடிவேலுக்கு அப்படி தடை விதிக்கும் பட்சத்தில் அதை எதிர்த்து அவர் கோர்ட்டுக்கு செல்ல முடிவு செய்து இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

vadivelu
இதையும் படியுங்கள்
Subscribe