Advertisment

வடிவேலுவின் சகோதரர் காலமானார்

vadivelu brother Jagatheeshwaran passed away

நடிகர் வடிவேலுவின் சகோதரர் ஜெகதீஸ்வரன் காலமானார். இவர் சிம்பு நடிப்பில் வெளியான 'காதல் அழிவதில்லை' படத்தில் நடித்திருந்தார். மதுரையில் ஜவுளி வியாபாரம் நடத்தி வருவதாகக்கூறப்படும் நிலையில் உடல் நிலை சரியில்லாத காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் மதுரை வீரகனூரில் அவரது இல்லத்தில் 52வது வயதில் உடல் நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். இவரது மறைவு வடிவேலு குடும்பத்தினர் உட்பட பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

கடந்த ஜனவரி மாதம் வடிவேலுவின் தாயார் சரோஜினி (87) வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவால் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

passed away actor Vadivelu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe