Advertisment

வடிவேலு பிறந்தநாள் - புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு

vadivelu birthday special poster released by naai sekar returns movie team

Advertisment

திரைத்துறையில் 90-களில் தன் நடிப்பு பயணத்தை ஆரம்பித்த வடிவேலு தொடர்ந்து தன் உடல்மொழி மற்றும் டைமிங் வசனங்களால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது சுராஜ் இயக்கும் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனிடையே மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகும் 'மாமன்னன்' படத்தில் நடிக்கிறார். இதனை தொடர்ந்து தற்போது லைகா நிறுவனம் தயாரிக்கும் 'சந்திரமுகி 2' படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் வடிவேலுவுக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படக்குழு வடிவேலுவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து படத்தினுடைய புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். விரைவில் இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

actor Vadivelu Naai sekar returns
இதையும் படியுங்கள்
Subscribe