Published on 14/11/2019 | Edited on 14/11/2019

அஜித், எச்.வினோத், போனிகபூர் கூட்டணியில் மீண்டும் உருவாகும் ‘வலிமை’ படத்தின் பூஜை சமீபத்தில் எளிமையாக நடந்தது. இந்த படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு தொடர்ந்து நடந்து வருகிறது. அதிரடி சண்டை படமாக தயாராகும் இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 'வலிமை' படத்தில் நடிகர் வடிவேலு நடிக்க இருப்பதாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளியான ராஜா படத்தில் வடிவேலு நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.