daqaX

வடிவேலு நடித்த ‘23ஆம் புலிகேசி’ படத்தின்வெற்றிக்குப் பிறகு, இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை ‘24ஆம் புலிகேசி’ என்ற தலைப்பில் உருவாக்க இருப்பதாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. பழைய படத்தின் அதே கூட்டணியில் உருவாக இருந்த படத்தில் லைகா நிறுவனமும் இணைந்திருந்தது. இதையடுத்து, படப்பிடிப்பு தொடங்கப்பட்ட கொஞ்ச நாட்களிலேயே சில பிரச்சினைகள் காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. நீண்ட நாட்களாக இப்படத்தின் பிரச்சினை முடிவுக்கு வராமல் இழுத்துக்கொண்டே போக, இதன் காரணமாக வடிவேலு மற்ற படங்களில் நடிக்கத் தடை விதித்தது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்.

Advertisment

இதனால் புதிய படங்களில் அவரை ஓப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். கடந்த சில வருடங்களாக படங்களில் நடிக்காமலிருந்த வடிவேலு, தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருவதாக கூறப்படும் நிலையில், ‘தலைநகரம்’, ‘மருதமலை’, ‘படிக்காதவன்’, ‘கத்தி சண்டை’ போன்ற படங்களை இயக்கிய சுராஜ் இயக்கும் புதிய படத்தில் வடிவேலு ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்திற்கு 'நாய் சேகர்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ‘தலைநகரம்’ படத்தில் வடிவேலு நடித்த ‘நாய் சேகர்’ கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.