Advertisment

"முதல்வர் போனில் தைரியம் சொன்னார்" - தாயார் மறைவு குறித்து வடிவேலு

vadivelu about his mother

Advertisment

நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா நேற்று இரவு மதுரையில் உள்ள அவரது வீட்டில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.இவரதுமறைவு வடிவேலு குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தாயார் மறைவு குறித்து வடிவேலு பேசும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், "தாய் தான் உலகத்துல எல்லாமே. பொங்கலுக்காகஊருக்கு வந்தேன். நல்ல உடல்நலத்தோடு தெம்பா தான் இருந்தாங்க. சளி காரணமாபல்ஸ் கம்மி ஆயிடுச்சு. பண்டிகை முடியும் வரை யாரையும் அம்மா தொந்தரவு பண்ணல. எல்லா நிகழ்வையும் முடித்துவிட்டு யாருக்கும் எந்த தொல்லையும் கொடுக்காமல் மண்ணை விட்டு போய்ட்டாங்க.

முதல்வர் ஐயா போனில் அழைத்து தைரியம் சொன்னார். அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட பலரும் ஆறுதல் சொன்னார்கள்" என உருக்கத்துடன் பேசியுள்ளார்.

actor Vadivelu
இதையும் படியுங்கள்
Subscribe