Advertisment

“சம்மருக்கு நீங்க எங்கேயும் டூர் போகத் தேவையில்லை” - வடிவேலு

vadivelu about gangers movie

சுந்தர்.சி மற்றும் வடிவேலு கூட்டணியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு உருவாகியுள்ள படம் ‘கேங்கர்ஸ்’. இப்படத்தை சுந்தர்.சி இயக்கி வடிவேலுவுடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சுந்தர் சியின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனம் இணைந்து வழங்குகிறது. இப்படத்தில் கேத்ரின் தெரசா கதாநாயகியாக நடித்திருக்க முனீஷ்காந்த், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சத்யா இசையமைத்திருக்கிறார்.

Advertisment

இப்படம் இன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ப்ரீமியர் காட்சி நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு பின்பு செய்தியாளர்களிடம் படக்குழுவினர் பேசினர். அப்போது வடிவேலு பேசுகையில், “எங்களுக்கு என்ன பேசுறதுன்னே தெரியல. அந்தளவிற்கு படத்துக்கு வரவேற்பு இருக்கு. இந்த சம்மருக்கு நீங்க எங்கேயும் டூர்லாம் போகத்தேவையில்ல. இந்த படத்தை பார்த்தாலே போதும். குழந்தைங்க முதல் பெரியவங்க வரை எல்லோரும் மனசு விட்டு சிரிக்கலாம். சிரிப்பு மட்டும் இல்ல. அதுல நல்ல கதையும் இருக்கு” என்றார்.

Advertisment

பின்பு சுந்தர். சி-யும் பட வரவேற்புக்கு நன்றி தெரிவித்தார். அடுத்து குஷ்பு கண்கலங்கினார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் சுந்தர்.சி-யை நினைத்து பெருமை படுவதாக கூறினார். இதே போல் படத்தில் நடித்த கேத்ரின் தெரசா, சந்தான பாரதி, அருள் தாஸ், பகவதி பெருமாள் உள்ளிட்டோரும் பட வரவேற்புக்கு நன்றி கூறினார்.

actor Vadivelu sundar c
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe