இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தின் பிரச்சனைகளை வடிவேலு தற்போது தீர்த்துவிட்டு சினிமாவில் மீண்டும் ஒரு வலம் வருவார் என்று அவருடைய ரசிகர்கள் எதிர்பார்க்கும் நிலையில் மேலும் ஒரு பிரச்சனையில் வடிவேலு சிக்கியிருக்கிறார்.

Advertisment

vadivelu

இந்தியன் 2 படத்தை தொடர்ந்து தலைவன் இருக்கின்றான் படத்தை கமல் இயக்கி, நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் வடிவேலுவையும் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் ஆர்கேவிடம் வடிவேலு,‘நானும் நீயும் நடுவுல பேயும்‘ என்கிற படத்தில்நடிக்க ஒப்புக்கொண்டு முன்பணமாக ஒரு கோடி ரூபாய் பணத்தை வாங்கியுள்ளார்.அந்த படத்தில் கதை சரியில்லை என்று பல மாறுதல்களையும் செய்துள்ளார். இதுபோல நாட்களை வடிவேலு கடத்தியுள்ளார்.இதனால், படப்பிடிப்பு தொடங்கப்படாமலேயே இருந்துள்ளது. எனவே, கொடுத்த முன்பணம் ஒரு கோடி ரூபாயைத் திரும்பக் கேட்டுள்ளார் நடிகர் ஆர்.கே. அதையும் வடிவேலு திரும்ப அளிக்கவில்லை. இதையே தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஆர்.கே. புகாராகக் கொடுத்துள்ளார்.

Advertisment

அந்தப் புகாரில், ‘‘தலைவன் இருக்கின்றான் படத்தில் வடிவேலு நடிக்கட்டும். அதில் எவ்விதப் பிரச்சினையுமில்லை. ஆனால், எனக்குக் கொடுக்க வேண்டிய 1 கோடி ரூபாய் பணத்தைக் கொடுத்தால் மட்டுமே படத்தை வெளியிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

தலைவன் இருக்கின்றான் படத்தில் வடிவேலு நடிக்கிறாரா என்று இன்னும் அதிகாரப்பூர்வ தகவலே வெளியாகாத நிலையில் தலைவன் இருக்கின்றான் படத்திற்கு வடிவேலுவால் வெளியாவதில் வந்துள்ளது.