Advertisment

கரோனா பாதிப்பு பாடல் வெளியிட்ட வடிவேலு!

இந்தியாவில் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பாதிப்பைத் தொடர்ந்து மே 3-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வீட்டிலிருந்து ஒருவர் வெளியே வந்து செல்லலாம். அதற்கும் பல நிபந்தனைகள் கடைப்பிடிக்கப்படுகிறது.

Advertisment

vadivel

இந்நிலையில் நடிகர் வடிவேலு கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பாடல் பாடி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் பாடியிருக்கும் வரிகள்:

"காடுகளை அழித்தோம்

மண் வளம் கெடுத்தோம்

நீர்வளம் ஒழித்தோம்

நம் வாழ்க்கை தொலைத்தோம்

வைரஸாய் வந்தே நீ

பாடம் புகட்டி விட்டாய்

இயற்கையை மதிக்கின்றோம்

இத்தோடு விட்டுவிடு" என்று பாடியுள்ளார்.

actor Vadivelu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe