
நடிகர் சூர்யா இன்று தனது 45 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது ரசிகர்கள் இதனைக் கொண்டாடும் வகையில் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சூர்யா நடித்து வரும் 'சூரரைப் போற்று'படத்திலிருந்து 'காட்டுப்பயலே' என்னும் பாடல் வெளியிடப்போவதாக முன்னரே படக்குழு அறிவித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து தற்போது 'காட்டுப்பயலே' பாடல் ஒரு நிமிட வீடியோவுடன் வெளியிட்டுள்ளது, படக்குழு. மேலும், வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' என்றொரு படத்தில் நடிப்பதற்காக சூர்யா ஒப்பந்தமானார். ஆனால், அந்தப் படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கப்படவில்லை.
இந்நிலையில், 'வாடிவாசல்' படத்தின் தயாரிப்பாளர் எஸ். தாணு வாடிவாசல் ஃபர்ஸ்ட் லுக்கை ரிலீஸ் செய்துள்ளார். இதுபோன்றகதாபாத்திர தோற்றத்தில்தான் சூர்யா நடிக்க இருக்கிறார் என்பதை டிசைன் மூலம் செய்து வெளியிட்டுள்ளனர். மேலும் அதனுடன், “இன்று உங்கள் பிறந்தநாள்... அது என்றும் சிறந்தநாள்... இனிய இந்நன்ணாளில் எல்லா நலமும் வளமும் பெற்று, தேக பலம், பாத பலம், ஆயுள் பலம் பெற்று, வாழிய பல்லாண்டு...” என்று பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)