vadhandhi fame director andrew louis next with prince pictures

விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் 'கொலைகாரன்'. ஆஷிமா நர்வால் கதாநாயகியாக நடிக்கநாசர், வி.டி.வி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அர்ஜுன் வில்லனாக நடித்திருந்த இப்படத்தைஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியிருந்தார். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தைத்தொடர்ந்து எஸ்.ஜே. சூர்யாவை வைத்து 'வதந்தி' இணையத்தொடரை இயக்கியிருந்தார். சமீபத்தில் வெளியான இந்தத்தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Advertisment

இந்த நிலையில் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கும் அடுத்த பட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி சூர்யாவின் சிங்கம் 2, கார்த்தியின் சர்தார் உள்ளிட்ட படங்களைத்தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ்நிறுவனம் தயாரிப்பில் ஒரு படம் இயக்கவுள்ளார். இப்படத்தின் நடிகர் பற்றி எந்த அறிவிப்பும் படக்குழு வெளியிடவில்லை. விரைவில் அதனைவெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment