Advertisment

புதிய தலைப்பில் ‘வடக்கன்’ - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

vadakkan movie new title update

வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, ராஜாபாட்டை உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியவர் பாஸ்கர் சக்தி. மேலும் கதையாசிரியாக தொலைக்காட்சி தொடர்களிலும், அழகர் சாமியின் குதிரை படத்திலும் பணியாற்றியுள்ளார். இவர் தற்போது வடக்கன் என்ற தலைப்பில் கதை, வசனம் எழுதி அதை இயக்கியும் உள்ளார். இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

Advertisment

இந்த படத்தில் குங்குமராஜ் முத்துசாமி, வைரமலா, ரமேஷ் வைத்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மு.வேடியப்பன் தயாரித்துள்ள இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் வழங்குகிறது. எஸ்.ஜே.ஜனனி இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் கடந்த ஏப்ரலில் வெளியானது. மேலும் மே 24ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டு, பின்பு சென்சாருக்கு அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள், ‘வடக்கன்’ என்ற தலைப்பை அனுமதிக்க மறுப்பு தெரிவித்தனர். அதனால் படத்தின் தலைப்பை மாற்றி ரிலீஸையும் தள்ளி வைக்க படக்குழு முடிவு செய்ததாக திரை வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து படத்திற்கு ரயில் என தலைப்பு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் வடக்கன் படத்தின் புதிய தலைப்பு அதிகாராப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் என தலைப்பு வைக்கப்படுள்ளதாக தெரிவித்த படக்குழு, ரிலீஸ் தேதி வெகு விரைவில் வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் புது தலைப்பு அடங்கிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe