danush

Advertisment

தனுஷ் - வெற்றிமாறன் கூட்டனில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் 'வட சென்னை'. சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், கருணாஸ், பவன் உள்ளிட்ட பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் வரும் அக்டோபர் 17ஆம் தேதி ஆயுதபூஜையை முன்னிட்டு உலகெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தனுஷ் இன் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்து லைக்கா ப்ரொடொக்சன்ஸ் வெளியிடும் இப்படம் தற்போது சீனாவில் அடுத்த மாதம் 11ந் தேதி முதல் 20ந் தேதி வரை நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவான பிங்யாவோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. இதில் 3வது நாளில் வடசென்னை திரைப்படம் திரையிடப்படுகிறது. இந்த திரைப்பட விழாவில் திரையிடப்படும் முதல் தமிழ் படம் 'வடசென்னை' என்பது குறிப்பிடத்தக்கது.