style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி, கடந்த அக்டோபர் 17ஆம் தேதி வெளியான 'வடசென்னை' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 10 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையே சமீபத்தில் இப்படத்தில் அமீர் ,ஆண்ட்ரியா சம்பந்தப்பட்ட முதலிரவு காட்சி மீனவ சமுதாய சகோதர சகோதரிகளின் மனம் புண்படும்படி இருந்ததாகவும் அக்காட்சியை படத்தில் இருந்து நீக்கும்படியும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் தற்போது படக்குழு அந்த காட்சியை நீக்கி விட்டு அதற்கு பதிலாக அமீர்,ஆண்ட்ரியா நடித்துள்ள வேறு இரு காட்சிகளை இணைத்துள்ளனர். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் வசனங்கள் சிலவும் நீக்கப்பட்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்