ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தனுஷ் 

dh

பொல்லாதவன், ஆடுகளம் படத்திற்கு பிறகு தனுஷ், வெற்றிமாறன் வெற்றி கூட்டணியில் மீண்டும் இணைந்திருக்கும் படம் வட சென்னை. மூன்று பாகங்களாக உருவாகும் இப்படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா நாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் இயக்குநர் அமீர், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், டேனியல் அனி போப் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக படக்குழு இன்று அறிவித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவான இப்படம் விரைவில் வெளியாகவுள்ளதால் இப்போதே இது மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

dhanush vadachennai vetrimaaran
இதையும் படியுங்கள்
Subscribe