Advertisment

"பத்து தலை ராவணனா பாய்ந்து வரும் போர்முரசு" - 'வாத்தி' இரண்டாவது பாடல்

vaathi second single

தனுஷ் நேரடியாக தெலுங்கில் அறிமுகமாகவுள்ள படம் 'சார்'. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்குத் தமிழில் 'வாத்தி' எனத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. நாகவம்சி மற்றும் சாய் தயாரிக்கின்ற இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார். சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

Advertisment

இப்படத்தின் முதல் பாடலாக 'அடியாத்தி இது என்ன ஃபீலு... உன்னால நான் ஃபெயிலு...' என்ற பாடல் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இரண்டாவது பாடலான நாடோடி மன்னன் இப்போது வெளியாகி உள்ளது. துள்ளலான தனுஷ் நடனமாட ஆண்டனிதாசனும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இணைந்து ஆடுகிறார்கள். மாண்டேஜாக லிரிக்கல் வீடியோ வெளியிட்டிருக்கிறார்கள். இப்பாடலை யுகபாரதி எழுதியுள்ளார்.

Advertisment

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/M_JwRcM73FI.jpg?itok=jD2txsqw","video_url":" Video (Responsive, autoplaying)."]}

actor dhanush GV prakash vaathi movie
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe