Advertisment

மாஸ்டரை போன்று ‘வாத்தி’க்கு வந்த சிக்கல் - முதல்வரிடம் கோரிக்கை

vaathi movie title issue

தனுஷ் நேரடியாக தெலுங்கில் அறிமுகமாகவுள்ள படம் 'சார்'. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு தமிழில் 'வாத்தி' எனத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. நாகவம்சி மற்றும் சாய் தயாரிக்கின்ற இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார். சம்யுக்தா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

Advertisment

படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் வருகிற 17 ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகவுள்ளது. இதனிடையே ஒன் லைஃப் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்படத்தில் பாலமுருகன் என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் ஆசிரியராக நடித்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பை மாற்றச் சொல்லி புதுச்சேரி மாநில ஆசிரியர்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வாத்தி என்ற தலைப்பு ஆசிரியர்களை அவமதிக்கும் சொல்லாக இருக்கிறது.உடனே தலைப்பை மாற்ற வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

இதே போல் விஜய் ஆசிரியராக நடித்து வெளியான 'மாஸ்டர்' படத்திற்கும்தலைப்பு தொடர்பாக பிரச்சனை எழுந்தது. இப்படத்தின் தலைப்பு குறித்து விடுதலைச் சிறுத்தைகள்கட்சியை சேர்ந்த வன்னி அரசு, ‘தமிழைத்தாய் மொழியாகக் கொண்டிருக்கும் விஜய் தொடர்ந்து ஆங்கிலப் பெயர்களைத்தனது படங்களில் தலைப்பாக வைப்பதன்மர்மம் என்னவோ’ எனக் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

actor dhanush actor vijay master vaathi movie
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe