நாடோடி மன்னன் தனுஷ்; வதந்திக்கு முற்றுப்புள்ளி - புது அப்டேட்

vaathi dhanush second single update

தனுஷ்நேரடியாகதெலுங்கில் அறிமுகமாகவுள்ள படம் 'சார்'. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்குத்தமிழில் 'வாத்தி' எனத்தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. நாகவம்சி மற்றும் சாய் தயாரிக்கின்ற இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார். சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர் மற்றும் 'வா வாத்தி' பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், இப்படத்தின் அடுத்த பாடல் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி 'நாடோடி மன்னன்' என்கிற இரண்டாவது பாடல் வரும் 17ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இது தொடர்பான போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இப்படம் அடுத்த மாதம் 17ஆம் தேதி வெளியாகும் என அறிவித்த நிலையில், கடந்த சில தினங்களாக ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளதாகத்தகவல் வெளியானது. இதையடுத்து, அந்தத்தகவல் வதந்தி என்று அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது வெளியிட்டுள்ள போஸ்டரில்ரிலீஸ் தேதியை படக்குழு குறிப்பிட்டுள்ளது.

இரண்டாவது பாடல் குறித்தஅப்டேட் வெளியாகியிருப்பதும்ரிலீஸ் தேதி உறுதியாகியிருப்பதும்தனுஷ் ரசிகர்களை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

actor dhanush vaathi movie
இதையும் படியுங்கள்
Subscribe