இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைக்கா புரடக்க்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் 'வானம் கொட்டட்டும்' படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் உருவாகும் இப்படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா சரத்குமார், நந்தா, சாந்தனு, அமித்ஷா பிரதான் உட்பட பலர் நடிக்கின்றனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
அறிமுக இயக்குனரும் மணிரத்னத்தின் சிஷ்யனுமான தனா இயக்கும் இப்படத்திற்கு பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைக்கிறார். சென்னை, திருநெல்வேலி, குற்றாலம் மற்றும் தமிழ்நாட்டின் தென் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை 'வானம் கொட்டட்டும்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது. மேலும் முதல் பாடல், இரண்டாவது பாடல், டீஸர், டிரைலர் & இசை வெளியீடு ஆகியவை விரைவில் அறிவிக்கப்படுகிறது. படத்தின் இறுதி கட்ட பணிகள் முடிந்து வரும் 2020 ஜனவரியில் இப்படம் வெளியாகவுள்ளது.