vaaitha movie controversy issue

அறிமுக இயக்குநர் மகிவர்மன் சி.எஸ் இயக்கத்தில் வெளியாகவுள்ள வாய்தா படத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி. மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். கதாநாயகியாக ஜெசிகா நடிக்க நாசர் மற்றும் 'ஜோக்கர்', 'கே.டி என்கிற கருப்புதுரை' பட புகழ் மு.ராமசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதன் முறையாக சலவை தொழில் செய்யும் சமூகத்தினர் பற்றியும், நீதிமன்றம் சாமானிய மனிதர்களை அணுகும் விதம் குறித்தும் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாக படக்குழுதெரிவித்துள்ளது.

Advertisment

இப்படத்தின் சிறப்பு காட்சிகளை பார்த்த அரசியல் கட்சி தலைவர்கள் நல்லக்கண்ணு, முத்தரசன், டி.ராஜா, கே.பாலகிருஷ்ணன், சி.மகேந்திரன், சீமான் உள்ளிட்ட பலரும் பாராட்டியுள்ளனர். 'வாய்தா' படம் நாளை(27.5.2022) திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தியதாக கூறி இப்படத்தை வெளியிட கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ராஜகுல சமூக நலச்சங்கம் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள இந்த புகார் மனுவில், சாதி வன்மத்தை தூண்டும் விதமாக இயக்குநரும், தயாரிப்பாளரும் படத்தை எடுத்துள்ளதாகவும், வரும் 27ம் தேதி தமிழகம் முழுவதும் வெளியாக உள்ள வாய்தா திரைப்படத்தை ஈரோடு மாவட்ட திரையரங்குகளில் வெளியிட தடை விதிக்க வேண்டும்" எனக் கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment