‘வாடிவாசல்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

fgesgesagsa

நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 40' படத்தில் நடித்துவருகிறார். சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து, சூர்யா நடிக்க உள்ள படம் 'வாடிவாசல்'. ‘வாடிவாசல்’ நாவலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை வெற்றி மாறன் இயக்குகிறார். தற்போது சூரி நடித்துவரும் படத்தின் பணிகளில் பிசியாக உள்ள வெற்றி மாறன், அவ்வப்போது ‘வாடிவாசல்’ படத்திற்கான முதற்கட்டப் பணிகளிலும் கவனம் செலுத்திவருகிறார்.

'வாடிவாசல்' படத்தில் நடிகர் சூர்யா காளையுடன் இருக்கும் வீடியோ ஒன்று சில மாதங்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில், இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை இன்று (16.07.2021) மாலை 5.30 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்தச் செய்தியால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். வி.கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படம், ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து தயாராக உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யா தந்தை, மகன் என இரு வேடங்களில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

actor suriya vaadivaasal
இதையும் படியுங்கள்
Subscribe