
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள படம் ‘வாடிவாசல்’. இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாணு தயாரிக்கிறார். சி.சு. செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ நாவலை மையமாக வைத்து உருவாகவுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். நடிகர் சூர்யா, தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் நடித்துவருகிறார். இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் சூரியை வைத்து 'விடுதலை' என்ற படத்தை இயக்கிவருகிறார்.
இப்படங்கள் நிறைவுபெற்ற பின் இருவரும் ‘வாடிவாசல்’ படத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில்,'வாடிவாசல்' படத்தின் முதற்கட்டப் பணிகள் ஆரம்பமாகி நடைபெற்றுவருகிறது. மேலும், வரும் அக்டோபரில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதற்காகப் படக்குழு ஆயத்தமாகிவருகிறது. சி.சு. செல்லப்பா எழுதிய 'வாடிவாசல்' நாவலை மையப்படுத்தி வெற்றிமாறன் இந்தப் படத்தை உருவாக்கவுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)