Advertisment

சின்ன படங்களுக்கு எப்படி தியேட்டர் கிடைக்கும்? - வி. சேகர் ஆதங்கம்

355

எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடித்திருக்கும் படம் ‘வள்ளிமலை வேலன்’. எஸ் மோகன் இயக்கியுள்ள இப்படத்தில் இலக்கியா நாயகியாக நடித்துள்ளார். நான் கடவுள் ராஜேந்திரன், செந்தில், செம்புலி ஜெகன், சுரேந்தர், முத்துக்காளை, காவிரி மகிமா, கணபதி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். கிராமத்து பின்னணியில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ஏ கே ஆல்ட்ரின்  இசையமைத்துள்ளார். 

Advertisment

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் இயக்குநர் வி. சேகர் பேசுகையில், “வள்ளிமலை வேலன்  படத்தை வேலூர் வள்ளிமலையில் எடுத்துள்ளார்கள், இப்போது முருகன் தான் சீசன் போல, அரசியலிலும் முருகன் மாநாடு நடக்கிறது, சினிமாவிலும் முருகன் வந்திருக்கிறார். இப்படம் பெரிய வெற்றி பெற என் வாழ்த்துக்கள். 

இப்போது படம் எடுப்பது பாதி வேலை தான், அதை புரமோட் செய்வது தான் முக்கிய வேலையாக உள்ளது. அதைச் சரியாகச் செய்ய வேண்டும். நாங்கள் படம் எடுக்கும் போது எத்தனை பெரிய படமாக இருந்தாலும் 250 தியேட்டருக்கு மேல் தர மாட்டார்கள், ஆனால் இப்போது கேட்டை திறந்து விட்ட மாதிரி 1000 திரையரங்குகளில் பெரிய  படம் மட்டும் தான் ரிலீஸாகிறது. அப்புறம் எப்படி சின்ன படங்களுக்கு தியேட்டர் கிடைக்கும். இது மாற வேண்டும். படத்தை நல்ல தியேட்டர் பார்த்து ரிலீஸ் செய்யுங்கள்” என்றார். 

 

 

theater tamil cinema director
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe