Advertisment

பந்தலை எரித்த திமுக பிரமுகர், கடுப்பான காங்கிரஸ் பண்ணையார் - வி.சேகர் பகிரும் மக்கள் சினிமா-2

v sekar about dmk, sivaji in makkal cinema

ஒண்ணா இருக்க கத்துகணும்', 'வரவு எட்டணா செலவு பத்தணா' , 'காலம் மாறி போச்சு', 'விரலுக்கேத்த வீக்கம்' உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் மற்றும் படத்தலைப்பு போன்றே நடுத்தர மக்களின் வாழ்வியலைத் திரையில் ரசிக்கும்படி காட்சிப்படுத்தியவர் இயக்குநர் வி.சேகர். இவரை நக்கீரன் ஸ்டூடியோ நடத்தும் 'மக்கள் சினிமா' நிகழ்ச்சி வாயிலாக சந்தித்து பேசினோம்.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="669ec91a-c33a-459c-b5f8-da98cf8312da" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300-Website%281%29_15.jpg" />

Advertisment

அப்போது அவரதுசினிமாமற்றும் வாழ்க்கையின்அனுபவங்களைபகிர்ந்துகொண்டார். அவர் கூறுகையில், “எங்கள் ஊரில் என்னுடைய நண்பர் பெருமாள் வாத்தியார் என்று ஒருவர் இருந்தார். எங்கள் ஊரைவிட்டுபோகும் வரை, அவர்தான் கொடிஏற்றுவதற்குகொடியைகட்டி அதில் பூவைத்துகொடுப்பார், அதனால் பண்ணையார்கள், ‘பட்டியலினத்தைசேர்ந்த வாத்தியார் கொடுத்து நாங்கள் கொடிஏற்றணுமா’ என நினைத்து கொடி ஏற்றுவதையே நிறுத்திவிட்டனர். இப்படித்தான் என்னுடைய ‘ஒண்ணாஇருக்ககத்துக்கணும்’படத்தில் சிவக்குமார், ஒரு வெட்டியான் கையில் கொடுத்து கொடி ஏற்ற சொல்லும் காட்சி வைத்தேன். அதற்கு என் ஊரில் நடந்ததுதான்இன்ஸ்பிரேஷன்.

இந்த கொடி ஏற்றும்பிரச்சனைகளுக்குபிறகு பண்ணையார்கள் மேலிடத்தில் பேசி பெருமாள் வாத்தியார் எங்கள் ஊருக்கு வேண்டாம் என்று அவரை மாற்றிவிட்டனர். அதோடு மட்டுமில்லாமல் எங்கள் ஊரில் 8வது வகுப்பு வரை வேண்டாம் என்றும் சொல்லிவிட்டனர், ஏனென்றால் அதிகம் படித்தால் பட்டியலின மக்கள் இது போல ஆசிரியராக வந்துவிடுவார்கள். அதனால் அதற்கு மேல் படித்துவிடக் கூடாது என்பதற்காக எங்கள் ஊர் பள்ளியை ஆரம்பப் பள்ளியாக மாற்றிவிட்டனர்.அப்படிசெய்ததால் பட்டியலின மக்கள் இங்கேயே படிக்கட்டும், வெளியூர் சென்று படிக்கும் அளவிற்கு அவர்களுக்கு வசதியில்லை என்றும் தங்களிடம் வண்டி இருப்பதால் தங்களின் பிள்ளைகளை வெளியூர் சென்றுபடிக்கசொல்லிவிடலாம் என்றும் நினைத்தனர்.

ஒரு பண்ணையார்வீட்டுபையனாகமிலிட்டரிகாரர்பாதிக்கப்பட்டத்தைவிடபெருமாள் வாத்தியார் பாதிக்கப்பட்டது எனக்கு மிகுந்தவேதனையைக்கொடுத்தது. ஏனென்றால் பெருமாள் என்னுடன் படித்தவர். என் வண்டியில் அவரை உட்காரவைத்துசென்றாலும் யாராவது பார்த்து வீட்டில் சொல்லிவிடுவார்கள்எனக்குத்திட்டு விழும். அவர் ஊரைவிட்டுபோகும்போது இங்கு நாம்பேசிக்கவேண்டாம், வெளியூரில் பேசிக்கொள்ளலாம் என்று சொல்லி விடை பெற்றார். இந்நிலையில்தான் திராவிட இயக்கங்கள் சாதிக்குஎதிராகப்பிரச்சாரம் செய்து வளர்ந்து வந்தனர்.

அந்த காலகட்டத்தின் போது திருவண்ணாமலையில் ஒரு இடைத்தேர்தல் வருகிறது. அங்குதான் தி.மு.க. முதலில் அடித்தளம் போட்டுஎம்.எல்.ஏ- வாகபா. சண்முகம்ஜெயித்தார். அவரும் என்னுடைய சொந்தக்காரர்தான். தேர்தலில் அவர் நின்ற சமயத்தில் காங்கிரஸ் அவரை தோற்கடிக்கவரிஞ்சுகட்டி வேலை செய்து வந்தது. நான் 6வது படிக்கும்போது காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும்எனக்காமராஜர் எங்கள் ஊருக்கு வர முடிவு செய்தார். அப்போது பண்ணையார்களான எங்கள் உறவினர்கள்தான் எங்கள் ஊரில் காங்கிரஸ்காரர்கள். மீதமுள்ள ஏழை மக்கள் தி.மு.க.காரர்கள். அவர்கள் எங்கள் ஊரில்வளர்வதைதெரிந்து கொண்டுஅதைகட்டுப்படுத்தி எப்படியாவது திருவண்ணாமலையில் காங்கிரஸைவளர்க்ககாமராஜர் எங்கள் கிராமத்திற்கு வருகிறார்.

காமராஜர் அப்போது முதலமைச்சர் என்பதால் நாங்கள் பந்தல் போட்டு, மாலையுடன் அவரைவரவழைக்ககாத்திருந்தோம். அப்போது ஒரு செய்தி வருகிறது. காமராஜரை வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்ட பந்தலை தீவைத்துகொளுத்திவிட்டனர் என்று. இதை அறிந்த காமராஜர் ‘பந்தலைகொளுத்தும் அளவிற்கு யார்இதைசெய்தது’ என்று கேட்டார்.அதற்குபண்ணையார்கள், ‘பா. சண்முகம் என்பவரின் மச்சான் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார் அவர்தான் இதைச் செய்தார்’ என்று கூறினார்கள்.அதற்குகாமராஜர் ‘அதேஊருக்குபோங்க’ என்றார். ‘பந்தலைகொளுத்திவிட்டார்கள்அப்பறம்எப்படி அங்க போவது’எனபண்ணையார்கள் கேட்க, ‘இருக்கட்டும் போகலாம்’ என்று அவர் சொன்னார். பிறகுஊருக்குகாமராஜர் வந்து, பள்ளியில் உள்ளபெஞ்சைஎடுத்து மேடை மாதிரி அடுக்கி அதில் உட்கார்ந்தார். அப்போது காங்கிரஸ்கமிட்டிதலைவராக இருந்தவர்எங்கஅப்பா. அதனால் காமராஜர் என்னை மடியில்உட்காரசொன்னார், நானும் அமர்ந்து கொண்டேன்.

மேடையில் காமராஜர் பேசுகையில் ‘கட்சி எதுவா இருந்தாலும் ஓட்டுபோடுங்க. ஆனால், பிரச்சனைகள்இருக்ககூடாது. தி.மு.க.காரர்களும் நாங்களும் ஓட்டு கேட்டபிறகுசென்று விடுவோம்,ஊர்க்காரங்கநீங்கசண்டை போடக்கூடாது. என் நோக்கம் மக்கள் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும்எனபதுதான்” என்றுபெருந்தன்மையாகபேசிவிட்டுசென்றார். ஆனால் அங்கு வந்த கூட்டம் 100 பேர் கூட இல்லை. எல்லோரும் அவர்களின் வீட்டிலிருந்தபடியே காமராஜர்பேசுவதைகேட்டனர். அதன் பிறகு பண்ணையார்கள் தங்களின் தோட்டத்தில் வேலை செய்பவர்களிடம், ‘காமராஜர் வரும் போது ஏன் கூட்டத்திற்கு வரவில்லை’எனகேட்டனர். அப்போது அவர்கள் ‘வேலை செய்வது வேறு, கொள்கை வேறு. தி.மு.க.-வுக்குதான்ஓட்டுப்போடுவோம். இங்குகூலிக்குத்தான்வேலை செய்கிறோம். அதற்காக நீங்கள் சொல்லும் கட்சிக்குஓட்டுப்போட முடியாது. காமராஜர்எங்களுக்குப்பிடிக்காது, அண்ணாதான்எங்களுக்குப்பிடிக்கும்’என்றனர். அப்போதுநம்மதான்வேலை தருகிறோம் ஆனால் இவர்கள் காமராஜரை விட்டு அண்ணா பிடிக்கும்எனசொல்கிறார்களே ஏன் என்று யோசித்து அதன் பிறகு தி.மு.க. கூட்டம் எல்லாம் பார்க்க ஆரம்பித்தேன்.

தி.மு.க.காரர்கள் பேசும்போது ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றும், சாதிஇரண்டொழியவேறில்லைஎன்றும் மேடையில் முழங்குவார்கள். ஒருவனுக்கு 500 ஏக்கர் நிலம்இருக்குமற்றொருவரிடம் நிலமே இல்லை. எல்லோருக்கும் நிலம், வேலை வேண்டும்’ எனவித்தியாசமாகபேசுவார்கள். இதைப் பார்க்கும்போது தி.மு.க.காரர்கள் மக்கள்பிரச்சனையைபேசுகிறார்கள் என்று புரிந்துகொண்டேன். அதனால்தான் ஜனங்கள் அவர்கள் பின்னால் கூடி உள்ளது எனத் தெரிந்துகொண்டேன். அதிலிருந்து எங்கள்வீட்டிற்குதெரியாமல் தி.மு.க.கூட்டத்தைசென்று பார்க்க ஆரம்பித்தேன். வீட்டில் காங்கிரஸ்காரர்கள் என்பதால் சிவாஜி படம்தான் பார்ப்போம், எம்.ஜி.ஆர். படம் பார்க்கவிட மாட்டார்கள். நான் வீட்டில் சிவாஜி படம்பார்க்கப்போவதாகசொல்லிவிட்டுதியேட்டரில்எம்.ஜி.ஆர். படம் பார்ப்பேன். அதற்கு எங்கள் வீட்டில் எம்.ஜி.ஆர் படம்தான்ஓடுதுநீ எதைப்பார்த்த என்று திட்டுவார்கள். சிவாஜிபடத்திற்குகூட்டம் வராமல் எம்.ஜி.ஆர்.படத்திற்குகூட்டம் வழியும். சிவாஜிநல்லாதான்நடிக்கிறார் பிறகு ஏன் எம்.ஜி.ஆர்-க்குகூட்டம் வருகிறது என்று பார்த்தால் எல்லோரும் ஏழை மக்கள்.சினிமாவில்சிவாஜி, எம்.ஜி.ஆர் என்று பிரிக்கும்போதே ஏழை மற்றும் பணக்கார மக்கள் தனித்தனிபாலிசியில்இருக்கிறார்கள் என்று புரிந்துகொண்டேன்.

அதன் பிறகு திருவண்ணாமலையில் நான் கல்லூரியில் படிக்கும்போது, அங்கு மாணவர்கள் எம்.ஜி.ஆர்-க்கும்சிவாஜிக்கும் தனித்தனி மன்றங்கள் வைத்திருந்தனர். சிவாஜி மன்றத்திற்கு நடிகர் திலகம் என்று பெயர் வைத்திருந்தனர். காங்கிரஸ் குடும்பம் என்பதால் சிவாஜி மன்றத்தில் உறுப்பினரானேன். அந்த பக்கம் எம்.ஜி.ஆர். மன்றத்திற்கு மக்கள் திலகம் என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. நடிப்பதால் சிவாஜிக்கு நடிகர் திலகம்எனபெயர் வைத்துள்ளார்கள். ஆனால், எம்.ஜி.ஆர்-க்குமக்கள் திலகம் என வைத்துள்ளார்களே என்றுஅதைக்பற்றிதெரிந்து கொள்ள ஆர்வம் வந்துவிட்டது. திருவிளையாடல், சரஸ்வதி சபதம் என்று புராணம் கதைகளில் சிவாஜி படம் பண்ணிக்கொண்டு இருந்தபோது, எம்.ஜி.ஆர் ஒரு பக்கம் சாதாரண மக்கள் எப்படிமேல்மட்டதிற்குபோவது மற்றும் அநியாயத்திற்குஎதிராககுரல் கொடுப்பது போன்ற படங்களில்நடித்துகைதட்டல்வாங்கிக் கொண்டிருந்தார். இதனால் நானும் கொஞ்சம் கொஞ்சமாக எம்.ஜி.ஆர்-ஐ ரசிக்க ஆரம்பித்துவிட்டேன். இவர்கள் இருவரின் படங்களையும் தொடர்ந்து பார்த்து வரும்போது மக்கள் என்றால் என்ன ஏன் எம்.ஜி.ஆர்-க்குஅப்படிபேர் வந்தது, பின்பு மக்கள் என்றால் என்னஎன்பதைத்தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன்” என்றார்.

Nakkheeran Studio Makkal Cinema V.Sekar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe