nani v

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நானி கடைசியாக 2019ஆம் ஆண்டில் கேங் லீடர் என்ற படம் வெளியானது. அதனை தொடர்ந்து அவர் ‘வி’ என்ற படத்தில் கவனம் செலுத்தி வந்தார். இது அவருடைய வெளியாகும் 25வது படமாகும்.

Advertisment

25 வது படம் என்பதால் இந்த படத்திற்கு பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த சமயத்தில் கரோனா அச்சுறுத்தலால் படத்தின் தியேட்டர் ரிலீஸ் தள்ளிப்போனது. கடைசியில் அமேசான் ப்ரைம் இந்த படத்தை பெரும் தொகைக்கு வாங்கி வெளியிடுகிறது. தென்னிந்திய நடிகர்கள் மிகவும் பிரபலமான ஹீரோவின் படம் ஓடிடியில் முதன் முதலில் வெளியாவது இவருடையதுதான் என்று சொல்லப்படுகிறது. வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி பலரை ஈர்த்துள்ளது.

Advertisment

மேலும் இந்த படத்தின் நானி முதன் முறையாக வில்லனாக நடிக்கிறார். சைக்கோவுக்கும்,போலீஸுக்குமான இடையே நடைபெறும் கேட் அண்ட் மவுஸ் வகையிலான படம் என சொல்லப்படுகிறது. சுதீர் பாபு, அதிதி ராவ் ஹைதாரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/eBcYKDUT8fs.jpg?itok=Fx-OZgoT","video_url":" Video (Responsive, autoplaying)."]}