இயக்குநர் அமீர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்ராஜ், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'உயிர் தமிழுக்கு'. இப்படத்தை ஆதம்பாவா இயக்கி தயாரித்தும் உள்ளார். அரசியல் பின்னணியில் உருவாகும் இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகிய நிலையில் தற்போது புது போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ள படக்குழு 'இது தமிழகம் அல்ல... தமிழ்நாடு' எனக் குறிப்பிட்டுள்ளது. அந்த போஸ்டரில் மாநாடு கூட்டம் நடப்பது போலவும் அதற்காகமறைந்த தலைவர்கள் கலைஞர், மற்றும் ஜெயலலிதா உள்ளிட்ட பேனர்கள் இருக்கும் நிலையில் நடுவில் அமீரின் பேனர் இடம்பெற்றுள்ளது போலவும் அமைந்துள்ளது. இப்புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகம் என்று சொல்வதா தமிழ்நாடு என்று சொல்வதா என்கிற ஒரு விவாதம் ஆளுநர் ஒரு நிகழ்வில் பேசியதிலிருந்து உருவாகியது என்பது குறிப்பிடத்தக்கது.