Advertisment

சிக்கலில் சிறிய பட்ஜெட் படங்கள்

Uyir Tamizhukku, parking movie issue

'கே.ஜி.எஃப்' இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சலார்'. இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க, பிரித்விராஜ் வில்லனாக நடிக்கிறார். மேலும் ஈஸ்வரி ராவ், ஜெகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வரும் செப்டம்பர் 28ஆம் தேதி பான் இந்தியா படமாக தெலுங்கு, இந்தி, தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகும் என முன்பு படக்குழு அறிவித்திருந்தது.

Advertisment

ஆனால் இப்படம் சில காரணங்களால் தள்ளி போவதாக அண்மையில் படக்குழு அறிவித்தது. அதில் புது ரிலீஸ் தேதியை அறிவிக்கவில்லை. விரைவில் வெளியாகவுள்ளதாக குறிப்பிட்டிருந்தது. இந்த படம் தள்ளி போவதால் செப்டம்பர் 28ஆம் தேதியில் நிறைய படங்கள் திடீரென தங்களது ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார்கள். மேலும் கணிசமான திரையரங்குகளை பிடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

இந்த சூழலில் அந்த தேதியில் முன்னதாகவே அறிவித்த உயிர் தமிழுக்கு, பார்க்கிங் உள்ளிட்ட சில சிறிய பட்ஜெட் படங்கள் தற்போது திரையரங்குகள் கிடைக்காமல் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் வசூலும் பாதிக்கக்கூடும் எனவும் அப்படங்களின் தயாரிப்பாளர்கள் தரப்பு கூறுகின்றனர். மேலும் தயாரிப்பாளர் சங்கம் இதனை சரியாக அணுகவில்லை எனவும், நடைமுறைகளை ஒழுங்காக பின்பற்ற வலியுறுத்த வேண்டும் எனவும் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர். விரைவில் இது போன்ற சிறிய பட்ஜெட் படங்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு தீர்வு எடுக்கப்பட வேண்டும் என்பது அவர்களது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இதனிடையே விஜய் ஆண்டனி நடித்த ரத்தம் படம் வருகிற 28ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அக்டோபர்6ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர். இதற்கு அந்த சிக்கல் மற்றும் பாதிப்பு தான் காரணம் என சொல்லப்படுகிறது.

ameer harish kalyan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe