
தனக்கு ஏற்பட்ட சறுக்கல்களை சரி செய்யும் முனைப்புடன் உடல் இளைத்து, முழு வேகத்தில் படப்பிடிப்பில் கலந்துகொண்டு, கரோனா காலத்திற்குள்ளேயே 'ஈஸ்வரன்' படத்தை முடித்து தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.
சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு' மற்றும் 'சில்லுனு ஒரு காதல்' இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில், நடிகர் சிம்பு அவரது தங்கைமகனுடன் விளையாடிக்கொண்டு இருக்கும்போது,தாயார்உஷா ராஜேந்தர் தனக்கு உணவு ஊட்டிவிடும் வீடியோவை சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். "throw back Mother's Love" என்ற ஹேஸ்டேக்குடன் சிம்பு பகிர்ந்துள்ள இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)