சென்னையில் நேற்று நடைபெற்ற அமெரிக்காவின் 247வது சுதந்திர தின விழாவில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டிகலந்து கொண்டு சிறப்பித்தார். இதையடுத்து இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.
இதையடுத்து நடிகர் கமல்ஹாசனையும் சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பாக எரிக் கார்செட்டி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இறுதியாக நாங்கள் சந்தித்துவிட்டோம்.பல தசாப்தங்களாக தனது உணர்ச்சிகரமானநடிப்பால் அனைத்து கதாபாத்திரத்திலும் நடித்துள்ள கமல்ஹாசனை சந்தித்து பேசியது மகிழ்ச்சி. தென்னிந்தியாவில் உள்ள பலதரப்பட்ட திரைத்துறைகளில்அறிந்துகொள்ள அதிகம் உள்ளன" எனப் புகழ்ந்து குறிப்பிட்டுள்ளார். மேலும் கமல்ஹாசனுடனான புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.