urvashirautela replay for rishabh pant insta post

Advertisment

பிரபல பாலிவுட் நடிகையும், மாடலுமான ஊர்வசி ரவுடேலா தமிழில் அண்மையில் வெளியான லெஜண்ட் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவர் சமீபத்திய பேட்டி ஒன்று தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் எனக்கு ஏகப்பட்ட லவ் ப்ரோபோசல் வந்துள்ளது. அதிலும் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் என்னைப் பார்க்க நீண்ட நேரம் ஹோட்டலில் காத்திருந்தார். அத்துடன் இரண்டு மனைவிகளுடன் இருக்கும் எகிப்து பாடகர் ஒருவரும் எனக்கு ப்ரோபோஸ் செய்ததாக தெரிவித்தார். மேலும் அவரின் பெயரை குறிப்பிட விரும்பாத ஊர்வசி ரவுடேலா அந்த ப்ரோபோஸலை தான் நிராகரித்து விட்டதாகவும் தெரிவித்தார். இதில் ஊர்வசி ரவுடேலா அந்த கிரிக்கெட் வீரரின் பெயரை ஆர்பி (RP) என்று குறிப்பிட்டிருந்தார்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="a1b749af-81af-4e32-bbd3-09a970ebec4d" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500-X-300-Viruman_13.jpg" />

இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டை டேக் செய்து இது குறித்து நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இதனால் கடுப்பான ரிஷப் பண்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “பிரபலமாக வேண்டும் என்பதற்காகவும், தன் பெயர் தலைப்பு செய்திகளில் வர வேண்டும் என்பதற்காகவும் சிலர் நேர்காணலில் இப்படி பொய் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. சிலர் புகழுக்காகவும், பெயருக்காகவும் இவ்வாறு பேசுவதெல்லாம் வருத்தமளிக்கிறது. கடவுள்தான் இவர்களைக் காப்பாற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

Advertisment

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஊர்வசி ரவுடேலா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், சின்ன பையா பேட் பந்துடன் விளையாட வேண்டும் என்று இந்தியில் குறிப்பிட்டுள்ளார். இதை தற்போது ரசிகர்கள் வைரல் செய்து வருகின்றனர்.