Urvashi Rautela loses 24 carat gold iPhone during India vs Pakistan match

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023ன், இந்தியாவின் 3வது லீக் போட்டி கடந்த 14ஆம் தேதி குஜராத் அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணியை இந்தியா எதிர்கொண்ட நிலையில் 7விக்கெட்டுகள்வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த போட்டியை காண பல்வேறு முக்கிய பிரபலங்கள் மைதானத்திற்கு வருகை தந்திருந்தனர். அதில் திரை பிரபலமான நடிகை ஊர்வசி ராவ்டேலாவும் கலந்து கொண்டு போட்டியை ரசித்தார்.

Advertisment

அப்போட்டியின் போது தனது 24 காரட் தங்க ஐ போனை தொலைத்து விட்டதாக அகமதாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பான புகார் மனுவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, போனைப் பற்றி ஏதாவது தகவல் இருந்தால் உடனடியாக என்னை தொடர்பு கொண்டு உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisment

பாலிவுட் நடிகையான ஊர்வசி ராவ்டேலா, தமிழில் சரவணா ஸ்டோர் குழுமத்தை சேர்ந்த சரவணன் நடித்த 'தி லெஜண்ட்' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.