Urvashi Rautela gets rs.1 lakh roses

பாலிவுட்டில் பல்வேறு பாடல்களுக்கு நடனமாடியும் சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்து பிரபலமானவர் ஊர்வசி ரவுதெலா. தமிழில் லெஜண்ட்சரவணன் நடிப்பில் வெளியான ‘தி லெஜண்ட்’ படம் மூலம் அறிமுகமானார். தமிழ், இந்தியை தவிர்த்து தெலுங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisment

இவர் தனது கை விரலில் சிறிய காயம் ஏற்பட்டதாக சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும் அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தனக்காக பிரார்த்தனை செய்யுமாறும் கேட்டுக் கொண்டிருந்தார். இதையடுத்து தான் குணம் பெற வேண்டி தனது தீவிர ரசிகர் ஒருவர், ஒரு லட்சம் விலையுயர்ந்த ரோஜாக்களை அனுப்பியுள்ளதாகப் பதிவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பான புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது விமர்சனத்தை உருவாக்கியுள்ளது.

Advertisment

இதே போல் அவ்வப்போது விமர்சனங்களில் சிக்கி வருவார் ஊர்வசி ரவுதெலா. கடைசி யாக கடந்த பிப்ரவரியில் தனது 30வது பிறந்தநாளைகொண்டாடிய அவர், 24 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட கேக்கை வெட்டி கொண்டாடினார். இந்த கேக்கை பாடகர் ஹனி சிங் ஊர்வசிக்கு பரிசாக அளித்த நிலையில் கடும் விமர்சனங்களையும் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.