Advertisment

கரோனாவிற்கு டிக் டாக் மூலம் கோடிக்கணக்கில் நிதி திரட்டிய நடிகை!

fsafa

Advertisment

கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது. இந்த தினக்கூலிப் பணியாளர்களுக்கு சினிமா பிரபலங்கள் உதவி வருகின்றனர்.

அந்தவகையில் ‘திருட்டுப்பயலே-2’ இந்தி ரீமேக்கில் நடிக்கும் பிரபல இந்தி கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவ்தொலா டிக்டாக் மூலம் ஸூம்பா, லதின், டபாடா நடன வகுப்புகளை நடத்தி, ரூ.5 கோடி நிதி திரட்டி கரோனா நிவாரணத்துக்கு வழங்கி உள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறும்போது... ''கரோனா பாதிப்புகளுக்கு அனைவரும் உதவ வேண்டும். எவ்வளவு நன்கொடை கொடுத்தாலும் அதை குறைத்து மதிப்பிடக்கூடாது. நிவாரணம் வழங்கிய அரசியல்வாதிகள், நடிகர்களை பாராட்டுகிறேன்'' என கூறியுள்ளார்.

Urvashi Rautela
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe