Advertisment

காப்பியடித்து ரசிகர்களிடம் மாட்டிக்கொண்ட நடிகை ஊர்வசி!

காபில், ஹேட் ஸ்டோரி 4, பாகல் பண்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஊர்வசி ரௌத்தலா. இவர் சமூக வலைத்தளங்களில் இதற்கு முன்னர் சிலர் பதிவிட்டிருக்கும் பதிவுகளை அப்படியே காப்பியடித்து தனது பதிவாகப் பதிவிட்டு ரசிகர்களிடம் மாட்டியிருக்கிறார்.

Advertisment

parasite

அதேபோல தற்போது பேரஸைட் படத்திற்கு நியூ யார்க்கைச் சேர்ந்த பத்திரிகையாளரின் விமர்சனத்தைத் தன்னுடைய விமர்சனமாகப் பதிவிட்டு ரசிகர்களிடம் மீண்டும் மாட்டியிருக்கிறார்.

Advertisment

தென்கொரிய படமான பேராஸைட் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.குறிப்பாக அமெரிக்காவில் இந்தப் படத்திற்கு கிடைத்த ஆதரவு என்பது ஆஸ்கார் விருது விழாவை வைத்தே தெரிந்துக்கொள்ளலாம்.ஆறு ஆஸ்கார் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு,நான்கு முக்கிய விருதுகளைத் தட்டிச் சென்றது இப்படம்.

இதனையடுத்து கடந்த வாரம் இந்தியாவில் அமேசான் ப்ரைம் ஓடிடி மூலம் பேரஸைட் படம் வெளியானது. அந்தப் படம் குறித்து ட்வீட் செய்திருந்தார். இறுதியில் அது நியூ யார்க்கைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவரின் ட்வீட் என்பது தெரியவந்துள்ளது.இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அந்தப் பத்திரிகையாளர், என்னுடைய கிராமர் பிழையைக்கூட ஏன் அவர் மாற்றவில்லை என்று கேலியாக ட்வீட் செய்திருக்கிறார்.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி,ஷபனா ஆஷ்மி என்னும் பிரபல நடிகை கார் விபத்தில் சிகிச்சை பெற்றுவரும்போது ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவையும் காப்பியடித்து பதிவிட்டிருந்தார் ஊர்வசி.

parasite twitter
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe