
லோகேஷ் கனகராஜ் தனது ‘ஜி-ஸ்குவாட்’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் உறியடி விஜய்குமார் நடித்துள்ள ‘ஃபைட் கிளப்’படத்தை வழங்குகிறார். இப்படத்தை அப்பாஸ் ஆர் அஹ்மத் இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இசை பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம் ரீல் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் 2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சென்னையில் படப்படிப்பு தொடங்கி நடத்தப்பட்டது. இப்போது படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் தனது நிறுவனத்தின் முதல் படமாக வழங்குகிறார். இப்படம் வருகிற 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்போது டீசர் வெளியாகியுள்ளது. டீசர் விழாவில் லோகேஷ் கனகராஜ், விஜய்குமார் என பல்வேறு படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் விஜய்குமார் பேசுகையில், “இப்படத்தின் தலைப்பு டேவிட் ஃபிஞ்சர் இயக்கிய ஃபைட் கிளப் படத்தின் அதே தலைப்பு. அந்த படம் பற்றி புகழ வார்த்தை இல்லை. அது ஒரு கல்ட் க்ளாசிக். அந்த படத்திற்கு இங்க நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அதை வைப்பது சரியாக இருக்குமா என்பதை யோசித்தோம். நம்ம உழைப்பை போட்டு ஒரு படத்தை எடுத்திருக்கிறோம். இந்த படத்தின் கதை வேறு. அது வேறு. ஆனால் எங்க படத்திற்கான ஒரு அடையாளமா இந்த தலைப்பு பொருத்தமாக இருந்தது. அப்படி இருக்கும்போது, அவர்களுக்கு நாம் கொடுக்கிற மரியாதையாக இருக்கட்டும் என நினைத்தோம். அதன் பெயரை கெடுத்துவிடமாட்டோம் என்கிற நம்பிக்கை இருந்தது. அதனால் இந்த தலைப்பை வைத்தோம்.
2020ல் இந்த படத்தை ஆரம்பித்தோம். நிறைய சவால்கள் வந்தது. ஒரு நல்ல படத்திற்கு அதற்கான நேரத்தை நாம் கொடுத்துதான் ஆக வேண்டும். படம் நல்லபடியே முடிந்தது. உடனே லோகேஷுக்கு போட்டு காண்பித்தோம். பார்த்தவுடனே நம்ம ரிலீஸ் பண்ணலாம் என சொன்னார்” என்றார். தொடர்ந்து இயக்குநர் பேர் சொல்லி பேச ஆரம்பித்த அவர் உடனே கண்கலங்கி விட்டார். பின்பு தண்ணீர் குடித்து சரியானார். அதன் பிறகு பேசிய அவர், “என்னுடைய அசிஸ்டண்டுகள் எல்லாம் ஆடியோ லான்ச் சொன்னவுடனே முதல் விஷயம், சீரிஸாக மட்டும் பேசாதீங்க. யாரும் கேட்பதில்லை. இப்படினு சொல்லியே அனுப்புவார்கள்” என உருக்கமுடன் பேசினார்.