/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/474_12.jpg)
உறியடி படத்தை இயக்கி நடித்ததன் மூலம் கவனம் பெற்றவர் விஜய் குமார். பின்பு உறியடி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி நடித்திருந்தார். பின்பு சூரரைப் போற்று படத்திற்கு வசனம் எழுதியிருந்தார். பின்பு அப்பாஸ் ஆர். அஹ்மத் இயக்கத்தில் ‘ஃபைட் கிளப்’ மற்றும் தமிழ் இயக்கத்தில் ‘எலெக்சன்’ படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் விஜய் குமார் ரஜினியை சந்தித்துள்ளார். இது தொடர்பாக விஜய் குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நான் என்றென்றும் போற்றும் ஒரு தருணம். இறுதியாக ரஜினியை கூலி படப்பிடிப்பில் சந்தித்தேன். அவரது ஆசியை பெற்றுக் கொண்டேன். லவ் யூ தலைவா. இதை சாத்தியமாக்கியதற்கு நண்பன் லோகேஷுக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கூலி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் நிலையில் விஜய் குமார் நடித்த ஃபைட் கிளப் படத்தை தனது தயாரிப்பு நிறுவனமான ஜி-ஸ்குவாட் நிறுவனம் மூலம் முதல் படமாக வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)