Advertisment

  'உப்பு புளி காரம்' - வெப் சீரிஸின் ரிலீஸ் அப்டேட்

Uppu Puli Kaaram release update

Advertisment

ரமேஷ் பாரதி இயக்கத்தில் விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்துள்ள வெப் சீரிஸ் 'உப்பு புளி காரம்'. இதில் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரினா, தீபக் பரமேஷ் மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். ஷேக் இசையமைத்துள்ள இந்த சீரிஸ், ஒரு வயதான அழகான தம்பதிகள் மற்றும் அவர்களின் நான்கு குழந்தைகள் என அவர்களின் குடும்பத்தில் நிகழும் சம்பவங்களை சுற்றி நடப்பவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சீரிஸின் 'குடும்பப் பாட்டு' எனும் தீம் பாடல் வெளியாகியுள்ளது. அதோடு இந்த சீரிஸின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மே 30ஆம் தேதி இந்த சீரிஸ் ஹாட்ஸ்டார் ப்ளஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. காதல், காமெடி, ஃபேமிலி செண்டிமெண்ட் மற்றும் பல திருப்பங்களுடன் இந்த சீரிஸ் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கனா காணும் காலங்கள் மற்றும் ஹார்ட் பீட் சீரிஸ்கள் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

web series hotstar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe