கன்னட முன்னணி நடிகர் உபேந்திரா நடிப்பில் உருவாகும் படம் ‘நெக்ஸ்ட் லெவல்’. இதில் நாயகியாக பிரபல நடிகை மலாஶ்ரீயின் மகள் மகள் ஆராதனா நடிக்கிறார். தருண் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தருண் சிவப்பா தயாரிக்கும் இப்படத்தை, பிரபல இயக்குநர் அரவிந்த் கௌஷிக் இயக்கியுள்ளார். கன்னடத் திரையுலகில் இதுவரை எடுக்கப்பட்ட தனித்துவமான வித்தியாசமான படங்களில் ஒன்றாகவும், பான்-இந்திய படமாகவும் இப்படம் உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment

இப்படத்தின் துவக்க விழா, ஹைதராபாத்தில் பிரம்மாண்ட முகூர்த்த விழாவுடன்  நடைபெற உள்ளது. இவ்விழாவில் பல நட்சத்திரங்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட பல நகரங்களில் நடைபெறவுள்ளது. இப்படத்தின் மிக முக்கிய விஎஃபெக்ஸ் காட்சிகள், மிக உயர்ந்த தரத்தில், இந்தியாவிலும் கனடாவிலும் உள்ள முன்னணி கிராபிக்ஸ் ஸ்டுடியோக்களுடன்இணைந்து உருவாக்கப்படவுள்ளது. 

Advertisment