update released of aamir khan mother health condition

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் அமீர்கான்கடைசியாக 'லால் சிங் சத்தா' படத்தில் நடித்திருந்தார். கடந்த தீபாவளியைமும்பையில்தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் கொண்டாடியநிலையில் அமீர்கானின் தாயார் ஜீனத் ஹுசைனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

Advertisment

இந்நிலையில், ஜீனத் ஹுசைன் உடல் நலம் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜீனத் ஹுசைன் தற்போது உடல் நலம் தேறி நலமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், மருத்துவர்கள் தொடர்ந்து ஜீனத் ஹுசைன் உடலைக் கண்காணித்து வருவதாக சொல்லப்படுகிறது.

Advertisment

முன்னதாக கடந்த ஜூன் 13 அன்று தனது தாய் ஜீனத் ஹுசைன் பிறந்தநாளை தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார் அமீர் கான். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.