Advertisment

லைகா நிறுவனம் வெளியிட்ட அப்டேட் ; யூகிக்கும் ரசிகர்கள் !

Update to be released by Lyca; Guessed fans

தமிழ் சினிமாவில் மெகா பட்ஜெட் படங்களை தயாரித்து வரும் நிறுவனம் 'லைகா புரொடக்ஷன்ஸ்'. இந்த நிறுவனம் விஜய் நடிப்பில் வெளியான 'கத்தி' படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானது. அதை தொடர்ந்து இவர்கள் தயாரிப்பில் வெளியான 'வடசென்னை', '2.0' உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கடைசியாக இவர்கள் தயாரிப்பில் வெளியான 'டான்' படம் 12 நாட்களில் ரூ.100 கோடி வசூலித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்ததாக இவர்கள் தயாரிப்பில் வெளியாகவுள்ள படம் 'பொன்னியின் செல்வன் 1'. சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertisment

இந்நிலையில் லைகா நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் நாளை (14.06.2022) மாலை 6 மணியளவில் முக்கியமான அறிவிப்பை வெளியிடவுள்ளோம் என தெரிவித்து சாவி இடம்பெற்றுள்ள போஸ்டரையும் பகிர்ந்துள்ளது. இப்போஸ்டரில் இடம்பெற்றுள்ள சாவியை சந்திரமுகி படத்தில் ஏற்கனவே பார்த்துள்ளோம், அதனால் 'சந்திரமுகி 2' படத்தின் அப்டேட்டாக இருக்குமோ என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisment

'சந்திரமுகி 2', சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் உருவாகவுள்ளதாகவும் அதில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாகவும் கடந்த 2020-ஆம் ஆண்டு தனது சமூக வலைதளப்பக்கத்தில் ராகவா லாரன்ஸ் அறிவித்திருந்தார். சமீபத்தில் கூட இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் அதில் அனுஷ்கா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

lyca
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe