/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/yashoda_0.jpg)
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தற்போது இயக்குநர்விக்னேஷ் சிவன் இயக்கும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு, டப்பிங் பணியில் தீவிரம் காட்டிவருகிறது.இப்படத்தை தொடர்ந்து நடிகை சமந்தா 'யசோதா' திரைப்படத்தில் நடித்துவருகிறார். இயக்குநர்கள் ஹரி ஷங்கர் மற்றும் ஹரி நாராயணன் இருவரும் இணைந்து இப்படத்தைஇயக்குகின்றனர். மணிசர்மா இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தில், நடிகை வரலட்சுமி சரத்குமார் மதுபாலாவாக நடிக்கிறார். இந்நிலையில், படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகர் உன்னிமுகுந்தன் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு இறுதியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)