கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்கிறார் மத்திய அமைச்சர் எல். முருகன்

Union Minister L.Murugan attend the Cannes Film Festival

உலகப் புகழ் பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா 2022' பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் மே 17-ஆம் தேதி தொடங்கி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. உலகில் மிகுந்த செல்வாக்கும், மதிப்பும் உள்ள இந்த விழா மே 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பதினொரு நாள் தொடர்ந்து நடைபெறும் இந்த விழாவில் உலகில் பல்வேறு மொழிகளில் உள்ள ஆவணப்படம், திரைப்படம் உள்ளிட்டவை திரையிடப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டிற்கான நடுவர்களில் ஒருவராக பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் கலந்து கொள்கிறார். மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் திரைபிரபலங்கள் ஏ.ஆர் ரஹ்மான், நயன்தாரா உள்ளிட்ட ஒரு குழு இந்தியா சார்பில் கலந்துகொள்கிறது.

இந்நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் கலந்து கொள்ளவுள்ளார். மே 22-ஆம் தேதி முதல் மே 24-ஆம் தேதி வரை இந்த விழாவில் கலந்துகொள்கிறார். இதற்காக நாளை(சனிக்கிழமை) பிரான்ஸ் நாட்டிற்கு எல். முருகன் பயணம் மேற்கொள்கிறார்.

anurag thakur cannes film festival l.murugan
இதையும் படியுங்கள்
Subscribe