தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிமிக்கிரிகலைஞராக இருந்த சிவகார்த்திகேயன் தனது திறமையால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாறியுள்ளார்.நடிப்பை தாண்டி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவராகவிளங்கும் சிவகார்த்திகேயன்குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரையும் கவர்ந்துள்ளார். காவல் துறையில் பணியாற்றிய சிவகார்த்திகேயனின் தந்தை அவர் சிறுவயதில்இருக்கும் போதுஇறந்துவிட்டார். தாய் மற்றும் சொந்த பந்தத்தின் அரவணைப்பில் வளர்ந்த அவர் தனது குடும்பம் குறித்து பொது வெளியில் நிறைய விஷயங்களைபகிர்ந்துள்ளார். இதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனின் சித்தப்பா பாபுவை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்த சந்திப்பில் சிவகார்த்திகேயன் குறித்தும்அவரது குடும்பங்கள் குறித்தும்பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதன் ஒரு பகுதி பின்வருமாறு...
"எனக்கு பெருமையாக இருக்கிறது. நான் தூக்கி வளர்த்த பிள்ளை சிவகார்த்திகேயன் இன்னைக்கு இவளோ பெரிய ஆளானதைநினைத்து ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. இதை விட அவன் இன்னும் பெரிய உயரத்திற்கு செல்வான். சிவகார்த்திகேயன்சின்ன வயதில் இருந்தே மிமிக்கிரி பண்ணுவான், என்ன மாதிரி பேசுவான், எனது மனைவி மாதிரி பேசுவான். குடும்பத்தில் இருக்கும் அனைவர்மாதிரியும் பேசுவான்.அவன் கூட இருக்கும் போது நேரம் போறதே தெரியாது. கலகலப்பாக பேசிக்கிட்டேஇருப்பான். நாங்க ஒன்பது பேர் கூட பிறந்தவங்க அதுலஇரண்டாவதாக பிறந்தவர் தாஸ், சிவகார்த்திகேயனோட அப்பா.சிறைத்துறை அதிகாரியாகஇருந்தார். எல்லாரும் நல்ல வேளையில் இருக்கிறோம். நான் நான்காவதாக பிறந்தேன். படித்துமுடித்துவிட்டு ப்ரொடியூசர்சேவியர் பிரிட்டோ கம்பெனியில் மெயின்டனன்ஸ்எக்ஸ்கியூடிவ் ப்ரொடியூசராக இருக்கிறேன். அவரைபற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும் விஜயின் சொந்தக்காரர். அவர் என்னிடம் முதலில் அறிமுகமான பொழுது "ஹாய் வணக்கம் நான் தளபதிவிஜய்யோட சித்தப்பான்னு தான் கை கொடுத்தார். அப்போ நான் சிவகார்த்திகேயனோடசித்தப்பா என்று கவுண்டர் போட்டு கை கொடுத்தேன். இதை பார்த்தவர்கள் எல்லாம் கைதட்டினார்கள் . அந்த நிகழ்வுகள் எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது" என்றார்.