Advertisment

ஜூன் மாதம் வெளியாகும் உமாபதி ராமையாவின் 'பித்தல மாத்தி'

umapathy thambi ramaiya pithala maathi release update

உமாபதி ராமையா, சம்ஸ்கிருதி, பால சரவணன், வினுதா லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பித்தல மாத்தி'. மாணிக்க வித்யா இப்படத்தை இயக்க ஜி. சரவணன் தயாரித்திருக்கிறார். மோசஸ் இசையமைத்திருக்கிறார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்படம் வருகிற ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இப்படத்தைப் பற்றி தயாரிப்பாளர் சரவணா பேசுகையில், ''பித்தல மாத்தி என்றால் கேடித்தனம்.. தகிடு தத்தம்.. செய்பவர்களைக் குறிக்கும். ஒருவர் வாழ்க்கையில் நல்லது கெட்டதற்காக என்னென்ன செய்ய வேண்டி இருக்கிறது என்பதனை விவரிப்பது தான் இதன் திரைக்கதை. கதையின் நாயகன் அவருடைய வாழ்க்கையில் நல்லது எது? கெட்டது எது? என்பதனைத்தெரிந்து கொண்டு, எம்மாதிரியான பித்தல மாத்தி வேலைகள் செய்து வாழ்க்கையில் முன்னேறுகிறார்? என்பதுதான் இப்படத்தின் கதை. இந்தத் திரைப்படம் ஜூன் மாதம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது'' என்றார்.

ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் நிறுவனம் இதற்கு முன் நான்கு படங்களைத்தயாரித்து இருக்கிறது. இவர்களின் இணை தயாரிப்பில் ஜோரா கைய தட்டுங்க, என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.பித்தல மாத்தி திரைப்படம் வெளியான பிறகு ஜோரா கைய தட்டுங்க திரைப்படம் வெளியாக இருப்பதாக தயாரிப்பாளர் ஜி.சரவணன் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe