Umapathy Ramaiah new film update

உமாபதி ராமையா, சம்ஸ்கிருதி, பால சரவணன், வினுதா லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பித்தல மாத்தி'. மாணிக்க வித்யா இப்படத்தை இயக்க ஜி. சரவணன் தயாரித்திருக்கிறார். மோசஸ் இசையமைத்திருக்கிறார். இப்படம் வருகிற 22 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது

Advertisment

படத்தைப் பற்றி தயாரிப்பாளர் சரவணா பேசுகையில், ''பித்தல மாத்தி என்றால் கேடித்தனம்,தகிடு தத்தம்செய்பவர்களை குறிக்கும். ஒருவர் வாழ்க்கையில் நல்லது கெட்டதற்காக என்னென்ன செய்ய வேண்டி இருக்கிறது என்பதனை விவரிப்பது தான் இதன் திரைக்கதை. கதையின் நாயகன் அவருடைய வாழ்க்கையில் நல்லது எது? கெட்டது எது? என்பதனை தெரிந்து கொண்டு, எம்மாதிரியான பித்தல மாத்தி வேலைகள் செய்து வாழ்க்கையில் முன்னேறுகிறார்? என்பதுதான் இப்படத்தின் கதை'' என்றார்.

Advertisment