Advertisment

மணியார் குடும்பம், திருமணம் படத்தை தொடர்ந்து தம்பி ராமையா மகனின் அடுத்த படம் 

umapathy

வியு சினிமாஸ் மற்றும் நியு பார்ன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் 'தேவதாஸ்'. தம்பி ராமையா-ஷாகுல் ஹமீது இணைந்து தயாரித்து, அறிமுக இயக்குனர் இரா மகேஷ் இயக்கி, ‘அதாக்கப்பட்டது மகா ஜனங்களே’, ‘மணியார் குடும்பம்’, ‘திருமணம்’ ஆகிய படங்களை தொடர்ந்து உமாபதி ராமையா-யோகி பாபுவுடன் இணைந்து நடித்திருக்கும் படம் 'தேவதாஸ்'. ஒரு மனிதனுக்கு மிகப் பெரிய சந்தோஷமும், மிகப் பெரிய துக்கமும், ஒரே நேரத்தில் நடக்குமென்றால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதே இத்திரைப்படத்தின் கதைக்களம். இந்த உணர்வுப்பூர்வமான கதையை நகைச்சுவை கலந்து, ஜனரஞ்சகமாக விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். மனிஷா யாதவ், ‘சகா’ ஐரா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் உமாபதியோடு இப்படத்தில் நடித்துள்ளனர்.

Advertisment

devadas
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe